மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி 

Home TamilNadu மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி 
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி 
Spread the love

கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணியின் அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்படும்.

பயிற்சியின் முக்கிய அம்சங்களில், வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு ஒழுங்காகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். EVM இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், சாத்தியமான முறைகேடுகளைத் தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் அதிகாரிகள், பயிற்சி முடிந்தவுடன் தங்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள வாக்கு எண்ணும் பணியாளர்கள் அனைவருக்கும் இதே பயிற்சியை அளிப்பார்கள். இதன் மூலம் முழு மாநில அளவில் ஒரே மாதிரியான, தரமான மற்றும் ஒழுங்கான வாக்கு எண்ணும் நடைமுறை உறுதி செய்யப்படும்.

மே 4, 2026 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிக்கு முன்னதாக நடைபெறும் இந்தப் பயிற்சி, வாக்கு எண்ணும் பணி சிறப்பாகவும், எந்தவித சர்ச்சையும் இன்றியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India