மின்வெட்டுக்கு END CARD…மின்வாரிய அலுவலகத்தில் விஜய் திடீர் ஆய்வு!

Home TamilNadu மின்வெட்டுக்கு END CARD…மின்வாரிய அலுவலகத்தில் விஜய் திடீர் ஆய்வு!
மின்வெட்டுக்கு END CARD…மின்வாரிய அலுவலகத்தில் விஜய் திடீர் ஆய்வு!
Spread the love

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு முன்னதாக இருந்த திமுக ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கில் புதிதாக தொடங்கப்பட்ட தவெக கட்சிக்கு மக்கள் வாய்ப்பு அளித்ததாகவும், நடிகர் என்ற பிம்பத்தின் காரணமாகவே விஜய்க்கு ஆதரவு கிடைத்ததாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்னை காரணமாக, “இது ஆட்சியின் முடிவுக்கான அறிகுறியா?” என பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, மின்வெட்டு காரணமாக பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், படிக்கும் நேரங்களில் திடீரென மின்தடை ஏற்படுவதால் அவர்களுக்கு கல்வியை கற்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மின்வெட்டு பிரச்னை அமைச்சர்கள் கூட்டத்திலும் எதிரொலித்தது. அமைச்சர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கூட திடீரென மின்தடை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தவெக அமைச்சர்கள் பேசும்போது கூட மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரியத்தில் புகார்கள் அளிக்கப்பட்டாலும், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபடுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மின்தடை தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் அவ்வப்போது விளக்கம் அளித்து வந்தாலும், இந்த பிரச்னை தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் சென்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு பகல் 12 மணி அளவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவரை அலுவலக வாயிலில் அமைச்சர் சிடி நிர்மல் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, தலைமை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு முதலமைச்சர் விஜய், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகம் மையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கேட்டறிந்த அவர், எந்த மாதிரியான புகார்கள் வருகின்றன, பொதுமக்கள் என்னென்ன குறைகளை தெரிவிக்கின்றனர் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், மின்தடை ஏற்படும் நேரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாட்டில் தினசரி எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது, பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அதை சமாளிக்க எந்தெந்த மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். இதற்கு மின்வாரிய அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India