புதிய தலைமை செயலகம் எதிரொலி ! பட்டினப்பாக்கத்திலிருந்து BACK அடிக்கப்போகிறாரா விஜய் ?

Home TamilNadu புதிய தலைமை செயலகம் எதிரொலி ! பட்டினப்பாக்கத்திலிருந்து BACK அடிக்கப்போகிறாரா விஜய் ?
புதிய தலைமை செயலகம் எதிரொலி ! பட்டினப்பாக்கத்திலிருந்து BACK அடிக்கப்போகிறாரா விஜய் ?
Spread the love

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலக திட்டம்:

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டு வசதி வாரியம், வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

மீனவர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு:

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலக கட்டுமான திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை :

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 29-ம் தேதி அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா :

இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் எதிராக அரசு எந்த முடிவையும் எடுக்காது. பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக திட்டம் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. மதிப்பீடு செய்யும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்ததாக தகவல் :

இந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடம் தொடர்பான விவரங்களுடன் புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தமிழக அரசு தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை திட்டத்தின் இறுதி நிலை குறித்து உறுதியாக கூற முடியாது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India