நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

Home TamilNadu நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்
Spread the love

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளியான இன்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள், மின்விளக்குகள் மற்றும் வாகனங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் மற்றும் மணல் வாளியை அருகில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியின் காரணமாக நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.