தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Home TamilNadu தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.  இதில்  தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு  நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித் குமார், மதன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.விவசாயிகள் முட்டை உற்பத்தியாளர்கள் கைத்தறித்துறையினர் மற்றும் வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்ட ஆலோசனையில் ஆகஸ்ட் 5 முதல் நாள் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் தாக்கல் செய்கிறார். அடுத்த நாளான ஆகஸ்ட் 6 வேளாண்மை பட்ஜெட் தாக்கல் அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார். 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத் இதுவரை நான்கு மண்டல் அளவிலான கூட்டம் நடத்தி உள்ளோம். சென்னையை தவிர மற்ற மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

மேலும் இந்த அறிக்கையில் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடை,மீன்வளம்,கூட்டுறவு  ஆகிய துறைகளுக்கு வேளாண் நிதிநிலையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசிலிக்கப்படும். குளிர் சாதன கிடங்குகள்,நெல் சேகரிப்பு கிடங்குகள், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது விவசாயிகளின் வாழ்வதாரமும் உயர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என்று  தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை அளித்துள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India