தமிழகத்தில் மயோனைஸ்-க்கு மேலும் ஒராண்டு தடை நீட்டிப்பு 

Home TamilNadu தமிழகத்தில் மயோனைஸ்-க்கு மேலும் ஒராண்டு தடை நீட்டிப்பு 
தமிழகத்தில் மயோனைஸ்-க்கு மேலும் ஒராண்டு தடை நீட்டிப்பு 
Spread the love

முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அறிவித்து இருந்தது. 

பச்சைக் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் மீதான தடையை, மேலும் ஒராண்டு தடை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.