
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு இருந்தன.வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையி னர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். பணம் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு திரும்பப் பெறப்பட்டன. அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் ஏற்படவில்லை. தமிழகத்தில் மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



Leave a Reply