இதுக்கு பேற தான் வெற்றி ஊழலா?…ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாவா? சர்ச்சையில் சிக்கிய தவெக அரசு!

Home TamilNadu இதுக்கு பேற தான் வெற்றி ஊழலா?…ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாவா? சர்ச்சையில் சிக்கிய தவெக அரசு!
இதுக்கு பேற தான் வெற்றி ஊழலா?…ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாவா? சர்ச்சையில் சிக்கிய தவெக அரசு!
Spread the love

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், இதனால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

குறிப்பான நேற்று(12.10.2026) அமைச்சர்கள் இருக்கும் அமைச்சரவையில் கூட மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வெட்டு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில்,இந்த மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரிய சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால் மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.

அதன் படிநேற்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் 1,500 மெகாவாட் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியம் கடந்த வாரம் டெண்டர் கோரியது. அதன் அடிப்படையில் தற்போது 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள மின்சாரத்தை யூனிட் 31.99 ரூபாய் முதல் 34.49 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்வதற்கு ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மாலை முதல் நள்ளிரவு வரை 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியதில் 2000 மெகாவாட் கிடைத்துள்ளது. மின்சாரம் யூனிட் 33.37 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை வாங்கப்பட உள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,நிலக்கரிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மின் கொள்முதல் டெண்டரில் அனல்மின்சாரம் கிடைக்கவில்லை. 

எரிவாயு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில்,அனல் மின்சாரத்தின் விலை யூனிட் சராசரியாக 10 ருபாய்க்கு கிடைத்தால் கூட அதில் நிலையான செலவு மாறும். செலவு சராசரியாக தலா 50 சதவீதம் இருக்கும் மின்சாரம் வாங்கினால் முழுத் தொகையும் செலுத்த வேண்டும். இல்லையெனில் நிலையான செலவு எவ்வளவோ,அதை முழுவதுமாக செலுத்த வேண்டும்.

அதே சமயம் எரிவாயு மின் நிலையங்களில் மின்சாரம் வாங்கவில்லை எனில் நிலையான செலவாக யூனிட்டிற்கு 1 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். தற்போது மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதால் அவசியம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு திமுக ஆட்சியில் வெறும் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று? என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் திமுக ஆட்சியின் போது  திமுக ஆட்சியின் போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்கப்பட்ட சூழலில், தற்போது கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுத்திருப்பது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்சாரம் வாங்குவதால் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படும் என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.