ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!

Home TamilNadu ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ ராஜா, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த மோதலைத் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிய எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்றத்தில் நடக்கும் தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இது சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா? இங்கு நடைபெறும் சண்டைகளால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “கடந்த 10 நாட்களாகக் கவனித்து வருகிறேன்; மானியக் கோரிக்கை விவாதத்தைத் தவிர மற்ற அனைத்து விவகாரங்களும் இங்கு நடைபெறுகின்றன. தேர்வுக்குத் தயாராவது போல இரவும் பகலுமாகப் பேரவைக்கு வருகிறோம், ஆனால் மக்களுக்குச் சேவை செய்யும் வகையிலான விவாதங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சண்டையிடும் உறுப்பினர்களே மீண்டும் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்காகச் சட்டமன்றத்தைப் பயன்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், “அவர் (ஆதவ் அர்ஜுனா) பேசினாலே இங்குப் பிரச்சினை தான் உருவாகிறது. எனவே அவருக்குப் பேச அனுமதி வழங்கக்கூடாது” என்று சபாநாயகரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India