அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்

Home TamilNadu அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்
Spread the love

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டது. அதனையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மே 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனநகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 7.5.2026 முதல் 29.5.2026 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.

2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 ( Shift – I – 101022/ Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India