"அடிக்கிற அடியில்.. பிணம் கடலில் மிதக்கும்" வைரலாகும் இலங்கை மீனவர்களின் மிரட்டல் AUDIO!

Home TamilNadu "அடிக்கிற அடியில்.. பிணம் கடலில் மிதக்கும்" வைரலாகும் இலங்கை மீனவர்களின் மிரட்டல் AUDIO!
"அடிக்கிற அடியில்.. பிணம் கடலில் மிதக்கும்" வைரலாகும் இலங்கை மீனவர்களின் மிரட்டல் AUDIO!
Spread the love

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகவும், இதனால் தங்களது வலைகளுக்கும் படகுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்படுவதாகவும் கூறி இலங்கை மீனவர்கள் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மிரட்டல் ஆடியோ

சமூக வலைதளங்களில் வைரலாக அந்த ஆடியோவில், “தமிழ்நாட்டில் இருந்து வந்த மீனவர்கள், எங்கள் மீனவர்களின் 15 ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை அறுத்து போட்டுவிட்டு சிரித்துவிட்டு செல்கின்றனர். இதை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள போவதில்லை. 1000 படகுகளுடன் வெடிமருந்துகளுடன் நாங்கள் தயாராக இருக்கிறோம். 

இதுபோல் இனி நடந்தால், ‘அடிக்கிற அடியில் பிணத்தை மீன் தான் தின்னும்’. உங்கள் உயிரை காப்பாத்திக்க பாருங்க.. இதை உடனடியாக கண்டித்து நிறுத்த பாருங்க.. இல்லை என்றால் உயிர் அனைத்தும் கடலில் மிதக்கும். ஆயிரம் படகுகளுடன் நிற்கிறோம்.. எல்லை மீறி படகுகள் வந்தால்.. ஒரு படகுகளும் திரும்பி செல்லாது.. உயிருக்கு நாங்கள் உத்திரவாதம் இல்லை.. நீங்கள் தமிழர்களாக இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை.. இதனால் இவை அனைத்தையும் கண்டித்து இத்துடன் நிறுத்திக்கொள்ளவும்”

என்று இலங்கை தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல் செய்தி மீனவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கை

இந்தச் சூழலைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் எக்காரணம் கொண்டும் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லவோ அல்லது இலங்கை கடற்பகுதிக்குள் நுழையவோ கூடாது என மீன்வளத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் மீனவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.