முதல் முறையாக 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் செல்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உட்பட 60 பேர் பயணம். 16 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற கனவு ஆசிரியர் போட்டித் தேர்வுகளில், இறுதியாக 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பிரான்ஸ் சென்ற நிலையில், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என 60 பேர் நாளை...
Category: TamilNadu
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு!
தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்திருந்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என...
அடியாட்களோடு வந்து தேவா மகள் மிரட்டுகிறார்… வைரலாகும் வீடியோவால் பகீர்!
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாடகைக்கு குடியிருந்துவரும், தீபிகா திடீரென கதறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தீபிகா தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டி விட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றதாகவும், உயிர் பிழைத்ததே பெரிது...
தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை – நீதிமன்றம் போட்ட உத்தரவு
தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில்...
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் – அவசரமாக விடுதியை காலி செய்ததால் பரபரப்பு
நெல்லையில் செயல்பட்டு வந்த ஜெல் நீட் அகாடமியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதியை அவசர அவசரமாக காலி செய்யப்பட்டது. நெல்லையில் இயங்கி வந்த ஜல் நீட அகாடமியில் மாணவ மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக நலத்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில்அங்கு செயல்பட்டு வந்த ஆண் பெண் இருபாலருக்கான விடுதிகள் எந்தவிதமான ஒப்புதலும் இன்றியும் போதிய உட்கட்டமைப்புகள் வசதிகள் இன்றியும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவையில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக புகைப்படம் – பாய்ந்தது வழக்கு
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா (41) என்பவர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்து இருந்ததற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.கோவை நகர போலீஸின் உளவுப் பிரிவு அதிகாரிகள் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்த நிலையில், சபியுல்லாவின் வாட்ஸ்அப் புரோஃபைல் படம் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆதரவாக...
எதிர்திசையில் வந்தவருக்கு வழி விட்டதால் வந்த வினை-மாணவிக்கு சேர்ந்த சோகம்
ஈசிஆர் அருகே போக்குவரத்து விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழி விட்டதால் கழிவுநீர் லாரியில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கேத்தரின் சென்ற மாணவியும், அவரது ஆண் நண்பரும் இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் சிறிது நகர்ந்தபோது பின்னால்...
நான் சொன்னா சொன்னதுதான்…. மன்னிப்பு கேட்க முடியாது.. – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் , பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,...
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் – குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்ததால் சிக்கல்
குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தால் மீண்டும் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் உணவு சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது வீட்டில் நடக்கும் விஷேசங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்பான் சென்ற கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தான் காரை இயக்கவில்லை...
ஏரியில் தத்தளித்த இருவரை காப்பாற்ற இறங்கிய பெண் – 3 பேருக்கு நேர்ந்த சோகம்
மேட்டூர் அருகே நங்கவள்ளி ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள்கள் ரேவதி, திவ்யதர்ஷினி மற்றும் மகன் சிவஸ்ரீ துணி துவைப்பதற்காக கொத்தி குட்டை ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கியபோது, ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனை பார்த்த ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில்...










