தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சீமான் சார்பில் தற்போது பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியை நோக்கிப் பின்வரும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச்...
Category: TamilNadu
செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது....
அரசு பள்ளிகளில் 'காக்கா முட்டை' திரைப்படம் ஒளிபரப்பு செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு...
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்றும் உறுதியளித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு...
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25 இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இத்தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 28.11.25 முதல் 30.11.25 வரை கனமழை...
கோவை செம்மொழி பூங்கா : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
செம்மொழிப் பூங்கா சிறப்புகள்: 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழி பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், மணமகள் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத்தோட்டம், ரோஜா தோட்டம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம் உள்ளிட்ட மர வகைகள் வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி வனத்தில் சங்க...
கார்த்திகை தீப திருவிழா : டிச 2.3 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் டிச. 2, 3 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளன....
"S.I.R. காலஅவகாசம் நீட்டிப்பு இல்லை” தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் டிச. 4 வரை தொடரும். அனைவரும் கண்டிப்பாக படிவத்தை நிரப்பித் தர வேண்டும். முடிந்தவரை தகவல்களை நிரப்பி கொடுக்க வேண்டும். இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 50% படிவங்கள்...
தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதி விபத்து : 8 பேர் பலி 40 பேர் காயம்
தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானதாகவும், அவர்களில் 5 பெண்கள், 3 ஆண் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், விபத்துக்குள்ளான பேருந்துகளில் சிக்கி, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தென்காசி அரசு மருத்துவமனையில் இதுவரை 40 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிகிறது. திடீரென பேருந்து ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பேருந்தின்...
மாமல்லபுரம், கல்பாக்கத்தில் பாதுகாப்பு ஒத்திகை : கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை தீவிரம்
தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். இன்றும் நாளையும் இந்த ஒத்திகை நடைபெற உள்ளது. ஒத்திகையின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் போலீசார் கடற்கரையில் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில்...









