Author: Source Author

Home Source Author
கவரைப்பேட்டையில் விபத்துக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை..
Post

கவரைப்பேட்டையில் விபத்துக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை..

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம்.  கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தடம் புரண்ட பெட்டிகளை நேற்று ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.  தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் மின்சார வயர் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னை...

கோயம்பேடு சந்தையில் கழிவுகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் சேகர்பாபு
Post

கோயம்பேடு சந்தையில் கழிவுகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் சேகர்பாபு

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சி.எம்.டி.ஏ சார்பில் சீரமைக்கப்பட்டு வரும் மினி கிளினிக் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம்  அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.  அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை...

முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய இரங்கல் மடல்
Post

முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய இரங்கல் மடல்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தங்கையின் கணவரும், திமுக நாளேடான முரசொலியின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.  அக்கடிதத்தில்… என்றும் முரசொலிக்கும் செல்வத்தின் கொள்கைப் பேனா! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் இரங்கல் மடல். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலையில், அண்ணன் முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை,...

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை
Post

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்து தற்போது ஒரு சவரன் ஆபரத்தத்தங்கம்  56,960 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு கிராம் தங்கம் 7,120 ரூபாய் என்கிற கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.  முன்னெப்போதும் இல்லாத அளவு சமீப காலத்தில் தங்கத்தின் விலை விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கம் என்பதுதான் பலரது சேமிப்பாக...

”பாதுகாப்பான குழந்தை பிறப்பை உறுதி செய்ய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை உத்தரவு!
Post

”பாதுகாப்பான குழந்தை பிறப்பை உறுதி செய்ய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 27,135 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 88,527 பிரசவங்கள் இந்த மாதம் நடைபெறும் உள்ளது. இதில் குழந்தை பிறப்பின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது.  அந்த வகையில் தமிழகத்தில் 1000 பிறப்புகளுக்கு 8 குழந்தைகளும் பிரசவ காலத்தில் ஒரு லட்சம் பெண்களில் 40 கர்ப்பிணிகளும் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது. இதற்கு உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய்...

சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 
Post

சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 

மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பிஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். பொன்னேரி ரயில் நிலையத்தை...

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 
Post

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 7 சீசன்கள் வரையிலும் இதன் நெறியாளராக இருந்த கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகவே, அடுத்து விஜய் சேதுபதி நெறியாளராக கொண்டு வரப்பட்டுள்ளார். கமல்ஹாசன் அளவுக்கு இவரால் நெறியாள்கை செய்ய முடியுமா என்கிற கேள்விகளோடு முதல் எப்பிசோட் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி. இறங்கிய பால் எல்லாம் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார்.  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த...

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு.. வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை எவ்வளவு தெரியுமா?
Post

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு.. வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை எவ்வளவு தெரியுமா?

ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையிலான ஐஸ்கிரீம்களின் விலை 3 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது . ஐஸ்கிரீம் பிடிக்காத மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது ஆச்சர்யமே. அதுவும் தமிழ்நாட்டில் வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி. பலரும் விரும்பிச் சாப்பிடுபது ஐஸ்கிரீமைத்தான். அதுவும் தமிழ்நாட்டு மக்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தரத்திலும், விலையிலும் நம்பி ஐஸ்கிரீமை வாங்குமிடம் என்றால் அது ஆவினில் தான். ஆவின் ஐஸ்கிரீம்களின் சுவையும்...

கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!
Post

கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை  பொலிவுறு நகர திட்டத்திற்காக சுற்றுலாத் துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவது ஒரு போலியான அரசாணை சமூக வலை தளங்களில் பரவியது.  அந்த போலி அரசாணையில் தனது கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச்சூழலில், நில மோசடியில் அரசு...

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு
Post

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்பட தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான ஓட்டுநர்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி கூடுதலாக விடப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை மாதவரத்தை நோக்கி...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.