Author: Source Author

Home Source Author
”3% உள் இட ஒதுக்கீடு அநீதிக்கு முடிவு கட்டுவோம்..” – கிருஷ்ணசாமி சூளுரை!
Post

”3% உள் இட ஒதுக்கீடு அநீதிக்கு முடிவு கட்டுவோம்..” – கிருஷ்ணசாமி சூளுரை!

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு ஆணையால் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களும், வடக்கு மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான ஆதிதிராவிடர்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்! இட ஒதுக்கீடுகளை யாருக்கும் யாரும் விருப்பப்படி அள்ளித் தந்து விட முடியாது! அதற்கான அழுத்தம் திருத்தமான காரணங்களும், ஆதாரங்களும் மிக மிக அவசியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய...

என்.எல்.சி Vs ஒப்பந்த தொழிலாளர்கள்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Post

என்.எல்.சி Vs ஒப்பந்த தொழிலாளர்கள்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.  மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் மற்றும்  ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான...

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த ஜிஎஸ்டி பில் – ரூ.22 கோடி கேட்டு நோட்டீஸ்
Post

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த ஜிஎஸ்டி பில் – ரூ.22 கோடி கேட்டு நோட்டீஸ்

சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியதால் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். செவ்வாப்பேட்டையை சேர்ந்த  மகேந்திரகுமார் (30)என்ற வாலிபர் தனது பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு உருவாக்கி மோசடி செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் மகேந்திரகுமார் புகார் அளித்துள்ளார். ஆவடி அருகே செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமாருக்கு  சிந்தாரிபேட்டை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து 22 கோடியே 29 லட்சம் 29ஆயிரத்து 772 ரூபாய் நிலுவை...

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Post

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது.  அனைத்து விமான நிலையாங்களிலும் ஒரு தனிமை...

சென்னையில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்?- போலீஸ் விசாரணை
Post

சென்னையில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்?- போலீஸ் விசாரணை

சென்னையில்  வீட்டு வேலை பார்த்து வந்த  சிறுமி அடித்து கொலையா? எனற கோணத்தில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார். சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ்(35.இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர்...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: ஒரே மேடையில் தோன்றும் திருமா-விஜய்-அரசியலில் புதிய பரபரப்பு
Post

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: ஒரே மேடையில் தோன்றும் திருமா-விஜய்-அரசியலில் புதிய பரபரப்பு

சென்னையில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனும், விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டி வி.சாலையில் மிக பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் யார் என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசி இருந்தார். இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி 
Post

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ஆம்...

நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக ஏன் கொண்டாடவில்லை?- திருமாவளவன் விளக்கம்
Post

நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக ஏன் கொண்டாடவில்லை?- திருமாவளவன் விளக்கம்

தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம் என திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக’  மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு...

தீபாவளிக்காக இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணமா?!…அரசு வெளியிட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் புள்ளி விவரம்!
Post

தீபாவளிக்காக இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணமா?!…அரசு வெளியிட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் புள்ளி விவரம்!

தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 தினங்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 8ஆயிரத்து 284 பேருந்துகளில் 5லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அவற்றில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர் தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு...

தீபாவளி அன்று சம்பவம் செய்த போலீஸ்..விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை வழக்குகள் பதிவா!
Post

தீபாவளி அன்று சம்பவம் செய்த போலீஸ்..விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை வழக்குகள் பதிவா!

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல். தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர் தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.