Author: Source Author

Home Source Author
கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்
Post

கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, திருநெல்வேலியில் பிறந்த முத்துவின் தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. தாயார் பெயர் சொர்ணத்தம்மாள். வேதியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற நிலையில், இவருக்கு இந்தியாவின் விண்வெளித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சேவையாற்றியுள்ளார். மறைந்த முன்னாள்...

"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" – முதலமைச்சர் பெருமிதம்
Post

"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" – முதலமைச்சர் பெருமிதம்

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.  ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மில்லியன் டாலர் கடனை உலக வங்கி கொடுத்துள்ளதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருவதாகவும்...

தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க...

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!
Post

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தரையிறங்க முடியாமல் வானத்தில் எட்டு விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் சூழல் உருவாகி சாரல் மழையானது பெய்து வருகிறது அதுமட்டுமின்றி காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால்...

தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!
Post

தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு புகார் வந்த வண்ணம் தான் உள்ளது. சைபர் கிரைம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை தமிழக காவல்துறை அளித்து வருகிறது. சென்னை, மேற்கு மாம்பலம், பிள்ளையார் கோயில் தெருவில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாங்கவிற்கு அவரது தோழி மூலம் திரு.வி.க நகர் பகுதியைச்சேர்ந்த ரவிகுமார் என்பவர்...

ஆன்லைன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநாகராட்சி! 
Post

ஆன்லைன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநாகராட்சி! 

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், தங்களின் பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும் எண்ணத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.  ஆண், பெண் பேதமின்றி அனைத்து தரப்பினரும் இந்த வேலையை...

சிறுமி பாலியல் வன்கொடுமை..  விடுதி காவலாளிக்கு ஜூன் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Post

சிறுமி பாலியல் வன்கொடுமை..  விடுதி காவலாளிக்கு ஜூன் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தாம்பரம் அருகேயுள்ள அரசு சேவை இல்லத்தில், எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தின் போது தப்பியோட முயன்ற அச்சிறுமியை இரும்பு ராடால் தாக்கியதில், அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அரசு தங்கும் விடுதியின் காவலர் மேத்யூவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில், காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது, இதனையடுத்து மேத்யூ மீது...

"குப்பை கொட்டாதே" என்று தாக்குதல்.. வாகன ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது!
Post

"குப்பை கொட்டாதே" என்று தாக்குதல்.. வாகன ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது!

சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் குப்பை கிடங்கில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கபட்டு கொட்டபட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர் கேடு மட்டுமின்றி நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மண்டலம் இரண்டில் இருந்து குப்பைகளை ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த திமுக  52 வது வட்ட செயலாளர் விஜயன் மற்றும் சக நண்பர்கள் நான்கு பேர் குப்பைகளை கொட்ட...

காதல் விவகாரத்தில் மோதல்.. வீடு புகுந்து ஒருவரை முகத்தில் வெட்டிய கும்பல்!
Post

காதல் விவகாரத்தில் மோதல்.. வீடு புகுந்து ஒருவரை முகத்தில் வெட்டிய கும்பல்!

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். இவருக்கும் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற நபருக்கும் பெண்ணை காதலிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் மீண்டும் காதல் தொடர்பாக பிரச்சனை வந்த நிலையில் அஸ்வினை கொலை செய்யும் நோக்கில் விஷ்வா தனது நண்பர்கள் ஐந்து பேருடன் நேற்று இரவு  அஸ்வின் வீட்டிற்கு...

சக ஊழியரின் 14 வயது மகள்.. நாசமாக்கிய கூலித்தொழிலாளி… அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Post

சக ஊழியரின் 14 வயது மகள்.. நாசமாக்கிய கூலித்தொழிலாளி… அதிரடி காட்டிய நீதிமன்றம்!

ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியை சேர்ந்த மைதீன்பாஷா என்பவர் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள துணிக்கடையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருடைய மகளான, எட்டாம்  வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடமன ஆசை வார்த்தை கூறி பள்ளிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மைதீன்பாஷா கட்டாய திருமணம் செய்ததை அடுத்து, அச்சிறுமியை ஒன்பது மாத கர்ப்பமாக்கியுள்ளார்.  இதனையடுத்து கடந்த 2020 ஆம்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.