Author: Source Author

Home Source Author
குடிபோதையில் பஸ் மெக்கானிக் செய்த சம்பவம்-10 நாட்களாக பணி வழங்காததால் ஆத்திரம்
Post

குடிபோதையில் பஸ் மெக்கானிக் செய்த சம்பவம்-10 நாட்களாக பணி வழங்காததால் ஆத்திரம்

சென்னையில் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதிய மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது. அடையாறு காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் குணசேகரன்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவருக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு முறை அடையாறு காவல் நிலையம் வந்த குணசேகரன் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த காவலர்களிடம் தகராறு செய்ததாகவும் பின்னர், டெப்போவுக்குள்...

இனி சுரங்கப்பாதைகளில் பஸ் சிக்கி நிற்காது – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்
Post

இனி சுரங்கப்பாதைகளில் பஸ் சிக்கி நிற்காது – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.  AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில் மழை காலங்களில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் நேரங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மழை பெய்யும்போது சாலைகளில் தேங்கும் மழைநீர் வடிகால் வழியாக அகற்றப்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளை காட்டிலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில்...

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு முடித்து வைப்பு
Post

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு முடித்து வைப்பு

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில்...

கங்குவா பற்றி பேச மாட்டேன்- தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு
Post

கங்குவா பற்றி பேச மாட்டேன்- தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

கங்குவா பற்றி பேச மாட்டேன் என விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசியதால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.இப்படத்தில்  முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர்...

தஞ்சையில் ஆசிரியை கொலை- இபிஎஸ் கண்டனம்
Post

தஞ்சையில் ஆசிரியை கொலை- இபிஎஸ் கண்டனம்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு...

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – நீதிமன்றம் உத்தரவு
Post

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை...

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை-அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
Post

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை-அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.  இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர்....

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கள்ளச்சாராய...

விசாரணைக்கு சென்ற பேராசிரியர் பற்களை உடைத்த காவல் ஆய்வாளர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Post

விசாரணைக்கு சென்ற பேராசிரியர் பற்களை உடைத்த காவல் ஆய்வாளர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் பற்கள் உடைத்த கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ஆறுமுகம். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான கந்தர்வகோட்டை காவல்துறையின் சமூக விரோத போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2 பேரின் இறப்பிற்கு நீதி...

× Free India Logo
Welcome! Free India