மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்களுக்கு தவெகவினர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு மீள்குடி அமர்வு, மாநகராட்சிக்குள்ளும் மூன்று சென்ற இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும்...
Author: Source Author
சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை வெட்ட முயற்சி- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணை வெட்ட முயன்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் கே.எச்.சாலையில் இளம்பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வீட்டுக்கு செல்வது போல் தெரிகின்றன. அந்த நேரத்தில் ஒருவர் வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதை தடுக்க முயன்ற அந்த இளம் பெண்ணுக்கும் கையில் வெட்டு விழுந்தது.மேலும் உயிருக்கு பயந்து அந்த இளைஞர் தன்னுடன் வந்த இளம்பெண்ணை...
பேரிடர் மீட்புப் பணி – அவசர கால வெள்ள மீட்பு குழு அமைப்பு
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படும். இதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு...
சென்னையில் ஜன.16ல் பன்னாட்டு புத்தகத் திருவிழா- அமைச்சர் அன்பில் மகேஷ்
நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது”, சிறந்த நூலகங்கள் மற்றும் வாசகர் வட்டங்களுக்கு கேடயம் வழங்கி, சென்னை...
அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?
ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி, குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார்.அப்போது குறுக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வின்போது, குறுக்குபுரம் ஊராட்சி மன்ற...
இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்ஐசி நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின்...
LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு- இபிஎஸ் கண்டனம்
LIC இணையதளத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். LIC நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்கம்...
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை -நீதிமன்றம் உத்தரவு
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது. மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில்,கடந்த 2004ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்....
ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர்...
ஈ.சி.ஆரில் 200 ஏக்கரில் ஆன்மீக சுற்றுலா மையம் -அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்
ஈ.சி.ஆர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம் அமையவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு,...










