சென்னை கிண்டி கலைஞர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Author: Source Author
சூரியனார் கோவில் ஆதினமடம் குறித்து நாளை முடிவு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சூரியனார் கோவில் ஆதினமடத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொண்ட தி்ட்டபணிகளை...
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மதியம் 1 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மழை பெய்யாததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும்,...
மளமளவென குறைந்த தங்கம் விலை-ரூ.320 குறைந்து விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று (நவ.12ம் தேதி) சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க லாருக்கு நிகரான...
மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக்கில் மது வாங்கினால் இனி ரசீது-டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது.இதனால் இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.294 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக்...
சென்னையில் தொழிலாளர்கள் தான் குறி-கேரள இளைஞர் கஞ்சாவுடன் கைது
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளா இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து போதைப் பொருள் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை தெற்கு மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடைத்த ரகசிய தகவல்களை அடிப்படையில் அசோக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கருப்பு கலர் டிராவல் பேக்...
போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது
சென்னையில் போதைப்பொருளுடன் நடிகை மீனா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த சினிமா துணை நடிகை மீனா சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகை மீனாவுக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நடிகை மீனா போலீஸ் விசாரணையில் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார்....
இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய பழக்கம்-இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர், கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் மேற்படி பெண், R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சுஜித்...
கேட்டும் கொடுக்காததால் விரக்தி- ஆணின் உதட்டை கடித்த நபர் கைது
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் உறவினரின் உதட்டை கடித்து காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மோதல் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். கணவன்-மனைவி பிரச்னை, குடும்ப சண்டைகள், முன்விரோத பகை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பார்க்கிறோம். சில பிரச்னைகள் பேச்சுவாத்தையின் மூலம் முடிகிறது. பல பிரச்னைகள் காவல் நிலையம் வரை சென்று முடிகிறது. அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் உதட்டை...
தேர்தலுக்கு அவகாசம்: எதிர்க்கட்சிகள் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை- உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் இருக்கிறது.அதற்குள் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவிக்காக 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணைதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவும் Co working space center பல மாவட்டத்தில் உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என துணை முதல்வர் தெரிவித்தார். குறு,...










