Author: Source Author

Home Source Author
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் முறைகேடு? – நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் கோரிக்கை
Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் முறைகேடு? – நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் கோரிக்கை

கடந்த பிப்ரவரியில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஐந்தாயிரம் பேருக்கு அண்மையில் அரசு பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் விடைத்தாள் நகல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது . அதில் பலருக்கு மதிப்பெண்கள் முரண்பாடாக...

நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
Post

நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார்.ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போன்று  காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் திருவுருவப்படத்திற்கு பாஜக மூத்த தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ வ.உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை...

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா…?- விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்
Post

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா…?- விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய்  ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அரசு சார்பில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. இதைத்தொடந்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்குக்கு பக்க ஏற்படுவதாகவும், குறிப்பாக இதய...

பயணிகள் கவனத்திற்கு…சென்னையில் மாறப்போகும் பேருந்து நிறுத்தங்கள் -தமிழக அரசு திட்டம்
Post

பயணிகள் கவனத்திற்கு…சென்னையில் மாறப்போகும் பேருந்து நிறுத்தங்கள் -தமிழக அரசு திட்டம்

சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் மாநகரப் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், மாநகரப் பேருந்துகள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை...

actress kasthuri:சிறையில் தவிக்கும் நடிகை கஸ்தூரி – ஜாமின் கோரி மனு 
Post

actress kasthuri:சிறையில் தவிக்கும் நடிகை கஸ்தூரி – ஜாமின் கோரி மனு 

நடிகை கஸ்தூரி புழல் சிறையில் தூக்கமின்றி தவித்து வருவதால் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசினார். இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மதுரை ஆகிய...

“பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்
Post

“பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என விஜய் அதிரடியாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி கொடி அறிமுகம், நிர்வாகிகள் தேர்வு, தவெக பிரமாண்ட மாநாடு என தவெகவின் அரசியல் நகர்வுகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.கடந்த அக்.27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தவெக பிரமாண்ட மாநாட்டில்...

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம் – அடுத்தடுத்த சம்பவங்களால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்
Post

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம் – அடுத்தடுத்த சம்பவங்களால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் இரண்டரை வயது குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவத்தில் கல்லூரி மாணவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச்சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு தர்சன் என்ற 5 வயது மகனும், இரண்டரை வயதில் புகழ் வேலன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. பாலமுருகன் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். நேற்று பாலமுருகன்- கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் பைக்கில்  அழைத்து கொண்டு...

ஆராய்ச்சி மாணவர்கள் புகார் விவகாரம்- பேராசியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்கல்வித்துறை 
Post

ஆராய்ச்சி மாணவர்கள் புகார் விவகாரம்- பேராசியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்கல்வித்துறை 

ஆய்வு மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்கள் ஒருவர் மேடையில் ஆளுநரிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு ஆய்வு நெறியாளராக உள்ள பேராசிரியர் துன்புறுத்துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. பல இடங்களில் இது தொடர்பால முறையிட்டும்...

"தீரன்" பட பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்-போராடி நகைத் திருடன் கைது
Post

"தீரன்" பட பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்-போராடி நகைத் திருடன் கைது

“தீரன்” பட பாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ் போராடி நகைத் திருடனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண்குமார். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் குடும்பத்துடன் தங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகை பட்டறையில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேர் நகை செய்யும் வேலை செய்து வருகின்றனர்....

எலி மருந்தால் பறிபோன 2 குழந்தைகள் உயிர்- அதிரடி காட்டும் அதிகாரிகள்
Post

எலி மருந்தால் பறிபோன 2 குழந்தைகள் உயிர்- அதிரடி காட்டும் அதிகாரிகள்

எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்தில் 3 நாட்களாக வேளாண்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு விசாலினி, என்ற மகளும், சாய் சுதர்சன் என ஒரு வயதில் மகனும் உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் தனியார் நிறுவனத்தை தொடர்பு...

× Free India Logo
Welcome! Free India