தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தினை நீர்வளத்துறை (WRD), கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி அதற்கு இழப்பீடாக ரூ.54,00,000/- வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக தேக்கு மரத்தை வெட்டிய ஆடிட்டர்: பின்னர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை...
Author: Source Author
மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர்...
வேங்கை வயல்: ஆதாரம் இல்லாமல் கைது பண்ணுவோமா? சிபிசிஐடி விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெளியே வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் இரண்டு வருடங்களாக விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள வேங்கை வயலைச் சேர்ந்த...
சிறிய ரக செயற்கைக்கோள்கள் தயாரிப்பில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றிய அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். வரக்கூடிய நாட்களில் தனியாரின் பங்களிப்போடு சிறிய ரக சேர்க்கை கோள்கள் விமான போக்குவரத்தை போல் தினமும் அனுப்புவதற்கு எதிர்பார்க்கிறேன். சாலை வசதி, மின்சார வசதி, தகவல் பரிமாற்ற...
தாடி பாலாஜி குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் நழுவிய தவெக பொதுச்செயலாளர்
சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கத்தில் புதிய அலுவலகம் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டு அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிலையில் விழாவிற்கு வந்த ஆனந்த்தை வரவேற்க தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மேள தாளங்களுடன் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆதம்பாக்கம்...
சிவாஜி வீடு ஜப்தி: அண்ணன் ராம் குமாருக்கு உதவ முடியாது..! நடிகர் பிரபு திட்டவட்டம்
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன்...
இ-பாஸ் அமல் குறித்து மறுஆய்வு செய்ய கோரிக்கை – தமிழக அரசின் மனு நாளை விசாரணை
உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000...
புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பன் காளை உயிரிழப்பு.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் வளர்த்து வந்த காளை அப்பகுதியில் எருதுவிடும் நிகழ்வில் பங்கேற்று பெரும் புகழ்பெற்றது. மற்ற காளைகளிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில், ஒற்றைக் கொம்பு மட்டுமே கொண்ட இவரது காளை.. அப்பகுதியில், வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன் என அன்போடு பலரால் அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாக்களில்...
எம்புரான் படத்திற்கு தடை விதிக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை.. என்ன காரணம்?
மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கியும், நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லை-பெரியாறு அணை குறித்து இடம்பெற்றுள்ள வசனத்திற்கு விவசாயிகள் மத்தியில் கண்டனம் கிளம்பியுள்ளது. இதுத்தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு.. ”எம்புரான் படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த...
6 கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த MP கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் வெறிப்பிடித்த தெரு நாய்கள் (ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவை) கடித்து மனிதர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது. சமீபத்தில் கூட நாய் கடியினால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாய் கடியினால் இறக்கும்...










