Author: Source Author

Home Source Author
200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!
Post

200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்தனர். சுமார் ரூ.20,00,000/- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண்...

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
Post

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் அதனோடு சேர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் அனைவரும் இருந்தனர்.  இந்நிலையில் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச்...

”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  – டிடிவி தினகரன்!
Post

”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  – டிடிவி தினகரன்!

தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சித் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.  இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...

ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!
Post

ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பாக, தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்க முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது....

சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 
Post

சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்த  நாகராஜ் – ரம்யா தம்பதியரின் 10 வயது மகன் மோகித் குமார். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார். இதனை வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின்...

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!
Post

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்து கொண்டே அவரது மகன் வழக்கறிஞரான அஸ்வத்தாமன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் கொலையை அரங்கேற்றியதும் விசாரணையில் வெளியானது. இதில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறையில் இருந்து ரவுடிகள் வழக்கறிஞர்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை...

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 
Post

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த  மேடவாக்கம் பிரதான சாலையில் இரண்டு வட மாநிலப் பெண்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது அவ்வழியே ரோந்து வாகனத்தில் வந்த பள்ளிக்கரணை போலீசார் சண்டையிட்டுக் கொண்டு இரு பெண்களை சமாதானப்படுத்தி விட்டனர். இருவரும் அதிகளவு  போதையில் இருந்ததால் சண்டையைத் தடுக்க சென்ற போலீஸாரிடம் கெட்டவார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒரு வட மாநில பெண்...

கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 
Post

கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பவுன்ராஜ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் துரைப்பாக்கம் விஜிபி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  உணவு டெலிவரி செய்யும் இடத்திற்குச் செல்ல செல்போனில் கூகிள் மேப் பார்த்தபடி சென்றுள்ளார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் இருசக்கர...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 
Post

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நியு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் பூனைகுட்டைப் பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (26) என்ற  திருமணமாகி கணவனை இழந்த பெண் தற்காலிகக் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்வழிச் சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலையை ஆனந்தி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தலைமை...

"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ – பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு
Post

"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ – பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு

சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமைதாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தர்களுக்கு...

× Free India Logo
Welcome! Free India