கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல், இதே குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆய்வு செய்தே...
Author: Source Author
சென்னையில் இன்றும் 8 விமானங்கள் ரத்து – இதுதான் காரணமா?
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்ட கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்றும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து, 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதோடு, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை, அதோடு ரெட் அலர்ட் விடுத்திருந்தது.இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் பலர் பாதுகாப்புக்...
மாணவனைத் தாக்கிய தலைமையாசிரியரைக் கண்டித்து அரசு பள்ளி முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை பள்ளித் தலைமை ஆசிரியர் லெஸ்லின் என்பவர் மர ஸ்கேல் கொண்டு தாக்கியதாகக் கூறி மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இதற்குப் பள்ளி தலைமையாசிரியர் லெஸ்ஸின் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதனையறிந்த அப்பகுதியைச் சார்ந்த மேலும் சில பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பள்ளியை முற்றுகையிட்டுள்ள தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாரக்...
வேளாண் மண்டலத்தில் இதெல்லாம் வருவதில் தவறில்லை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தஞ்சையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மினி டைட்டில் பார்க்கில் தொடங்கப்பட்ட ஐடி நிறுவனத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ தஞ்சாவூரில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட டைடல் நியோ பார்க்கில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. திறந்த குறுகிய காலத்திலே கம்பெனிகள் அனைத்தும் வந்துவிட்டது. டெல்டா மாவட்ட படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில்...
Centre sends train with 1,600 tonnes onions to Delhi to ease prices
Union Consumer Affairs Secretary Nidhi Khare has said on Thursday (October 17, 2024) that the Centre will distribute 1,600 tonnes of onions in the northern region to address the rising prices ahead of the festival season. The supply situation of tomatoes is also set to improve in the coming days with increased arrivals from Maharashtra...
தவெக மாநாட்டில் நான் பங்கேற்கிறேனா? -KPY பாலா சொன்ன பதில்
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KPY பாலா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.பின்னர் ஷோரூம்மில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா , “ குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் குறைந்து வருவதாக குறித்த...
நில மோசடி விவகாரம்: நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் – நடிகை கெளதமி
தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். நடிகை கௌதமி, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சுவாத்தான் கிராமத்தில் நிலம் வாங்கி தருவதற்காக ரூ.3 கோடியை பெற்றுக் கொண்டு நிலம் வாங்கி தராமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கி கொடுத்து பணத்தை மோசடி செய்ததாகவும், அவரிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கேட்டு ராமநாதபுரம் மாவட்ட...
மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கில், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த தடையை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான...
வணிக விதிகளில் திருத்தம்… அரசிதழில் வெளியான அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகளை எளிதாக பெரும்வகையில் தமிழ்நாடு வணிக விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல், திருத்தம் செய்தல், மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை, டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு துறை, 45 நாட்களுக்குள்...
”பாதிக்கப்படாத சென்னை… வெள்ளை அறிக்கை தேவையா?” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், “மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு. அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார். இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரில்...









