சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் பிரதான சாலையில் இரண்டு வட மாநிலப் பெண்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது அவ்வழியே ரோந்து வாகனத்தில் வந்த பள்ளிக்கரணை போலீசார் சண்டையிட்டுக் கொண்டு இரு பெண்களை சமாதானப்படுத்தி விட்டனர். இருவரும் அதிகளவு போதையில் இருந்ததால் சண்டையைத் தடுக்க சென்ற போலீஸாரிடம் கெட்டவார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒரு வட மாநில பெண்...
Author: Source Author
கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர்
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பவுன்ராஜ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் துரைப்பாக்கம் விஜிபி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்யும் இடத்திற்குச் செல்ல செல்போனில் கூகிள் மேப் பார்த்தபடி சென்றுள்ளார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் இருசக்கர...
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நியு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் பூனைகுட்டைப் பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (26) என்ற திருமணமாகி கணவனை இழந்த பெண் தற்காலிகக் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்வழிச் சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலையை ஆனந்தி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தலைமை...
"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ – பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு
சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமைதாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தர்களுக்கு...
இது இந்தி திணிப்பின் உச்சம்..உடனடியாக ரத்து செய்யுங்க.. – ராமதாஸ் வலியுறுத்தல்
”சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனம் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும்...
நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை..இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?
தங்கத்தின் விலை தினசரியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருசவரன் தங்கத்தின் விலையானது இன்று (அக்டோபர் 18) ரூ. 57,920 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை எட்ட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம். இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது....
மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!
டிடிஎஃப் மீண்டும் பைக் இயக்குவது போன்ற வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன். பைக் லைசன்ஸ் இல்லாத போது எப்படி பைக் இயக்குகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘வந்துட்டேன்னு சொல்லு..திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…’ என்ற மாஸ் வசனத்தை பேசாமல் செயலில் செய்து காட்டி வருகிறார் டிடிஎஃப் வாசன் என்ற தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக இருக்கும் டிடிஎஃப் வாசன் பல சர்ச்சைகளில் சிக்கியவர். பைக் ரேசிங் செய்து சர்ச்சையில்...
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் முதல்வர் இருப்பார்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
ஆட்சியல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பவர் தமிழக முதல்வர் என்று தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தருமபுரி கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துதறை, வேளாண்மை பொறியியல்...
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த உருவம்- பரவசமடைந்த பக்தர்கள்..!
திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த உருவத்தை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.அது தவிர விடுமுறை தினங்கள், திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். இந்த...
”அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்..” – உயர்நீதிமன்றம் அதிரடி!
கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல், இதே குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆய்வு செய்தே...










