பழனி பஞ்சாமிர்தத்துக்காக இத்தனை கோடியா? வாழைப்பழ சப்ளைக்கு மெகா டெண்டர்!

Home TamilNadu பழனி பஞ்சாமிர்தத்துக்காக இத்தனை கோடியா? வாழைப்பழ சப்ளைக்கு மெகா டெண்டர்!
பழனி பஞ்சாமிர்தத்துக்காக இத்தனை கோடியா? வாழைப்பழ சப்ளைக்கு மெகா டெண்டர்!
Spread the love

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காகத் தேவையான தரமான வாழைப்பழங்களை விநியோகம் செய்ய ரூ.1 கோடி முன்வைப்புத் தொகையுடன் டெண்டர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாமிர்தம் தயாரிப்புக்காக கற்பூரவள்ளி, குடகு வாழைப்பழம் மற்றும் மலைவாழைப்பழங்களை விநியோகம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதன்படி, ஒப்பந்தம் பெறும் நிறுவனம் அல்லது நிறுவனங்கள், பஞ்சாமிர்தம் தயாரிப்புப் பிரிவுக்குத் தேவையான வாழைப்பழங்களை 2027 ஜூன் 30-ம் தேதி வரை தொடர்ந்து விநியோகம் செய்ய வேண்டும்.

இதற்கான டெண்டர் முன்வைப்புத் தொகையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே நாளில் காலை 11 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.

மேலும், இதுதொடர்பான ஒப்பந்தப்புள்ளிக் கூட்டம் நவம்பர் 17-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் தரமான வாழைப்பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதுடன், ஒப்பந்த காலம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட ஒப்புக்கொண்ட விலையிலேயே வாழைப்பழங்களை விநியோகம் செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.