தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசின் முதல் பொது பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திருக்குறள் வாசிப்புடன் அவை கூடுகிறது.
இதையடுத்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், இந்த ஆண்டின் வேளாண் பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், சட்டசபை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் கருப்பு டி-ஷர்ட் அணிந்து அவைக்கு வந்தது கவனம் ஈர்த்தது. வேளாண் பட்ஜெட் தாக்கலுடன் இந்த அரசியல் நிகழ்வும் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply