ரசிகர் மன்ற தலைவருக்கு அரசு பதவி… இதுக்கு இல்லையா சார் ஒரு END?

Home TamilNadu ரசிகர் மன்ற தலைவருக்கு அரசு பதவி… இதுக்கு இல்லையா சார் ஒரு END?
ரசிகர் மன்ற தலைவருக்கு அரசு பதவி… இதுக்கு இல்லையா சார் ஒரு END?
Spread the love

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் Fact Check Unit-க்கு, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் Information Integrity Desk (IID) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக Online Thalapathy Fans Club தலைவரான குரு (@Guru Thalaiva) நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR)-யின் கீழ் இயங்கும் சமூக வலைதளப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக (Special Officer), தவெக ஐ.டி. விங் ஒருங்கிணைப்பாளர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

IID-யின் முக்கியப் பணிகள் முந்தைய Fact Check Unit போலவே தொடர்கின்றன. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள், போலி செய்திகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களை கண்டறிதல், அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் உண்மைச் சரிபார்ப்பு மேற்கொள்வது, ஆதாரங்களுடன் விளக்கங்களை வெளியிடுவது மற்றும் வதந்திகள் பரவுவதற்கு முன்பே அவற்றை கட்டுப்படுத்துவது ஆகியவை இந்த அமைப்பின் பொறுப்புகளாக உள்ளன.

IID அமைப்பில் குரு தலைவராக செயல்படுகிறார். பிரசன்னா IID Lead ஆகவும், சுஜிதா மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் அல்லது அதிகாரிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் Ticket-Based Tracking System மூலம் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு புகாருக்கும் தனித்துவமான டிக்கெட் எண் வழங்கப்படும். தகவல் பெறப்பட்ட தருணத்திலிருந்து உண்மைச் சரிபார்ப்பு வெளியிடப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளும் பதிவுசெய்யப்படும்.

அவசர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் ஒரு மணி நேரத்திற்குள், நடுத்தர முன்னுரிமை தகவல்கள் மூன்று மணி நேரத்திற்குள், குறைந்த முன்னுரிமை தகவல்கள் ஏழு மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்படும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அரசுத் துறையிலும் ஒரே ஒரு Nodal Officer நியமிக்கப்பட்டுள்ளதுடன், IID அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கிடையே தனி வாட்ஸ்அப் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனுடன், DIPR-ன் கீழ் தனியாக சமூக வலைதளப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநர், இணை இயக்குநர் (சமூக வலைதளம்), மக்கள் தொடர்பு அதிகாரி, சிறப்பு அதிகாரி, மூத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் கிராபிக் வடிவமைப்பாளர்கள் என ஆறு நிலை நிர்வாக அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பில் நான்காவது நிலையில் சிறப்பு அதிகாரியாக திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் சமூக வலைதள உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதற்கு முன் அவற்றின் தரத்தை பரிசோதித்து ஒப்புதல் வழங்கும் பொறுப்பையும் அவர் கவனிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திமுக ஆட்சியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தமிழ்நாடு Fact Check Unit உருவாக்கப்பட்டு, YouTurn இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் அயன் கார்த்திகேயன் அதன் Mission Director-ஆக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது இந்த அமைப்பு மற்றும் அந்த நியமனத்தை எதிர்த்து, அப்போதைய அதிமுக நிர்வாகியும் தற்போதைய அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் அந்த வழக்கை அவர் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், ஜோதிடர், சினிமாவில் உறுதுணையாக இருந்தவர்களுக்கு அரசு பதவிகளை வாரிக் கொடுத்துவிட்டு, அரசு வேலைக்காக தினமும் படித்து,தேர்வுகள் எழுதி எப்படியாவது அரசு வேலை கிடைத்துவிடும் என்ற கனவோடு பயணிக்கும் சாமானிய நபர்களின் கனவை தவெக அரசு தகர்த்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு அரசு பதவிகளை வழங்குவதை எப்போது முதலமைச்சர் விஜய் நிறுத்தப் போகிறார் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India