Silent Mode-ல் இருந்து வெளியே வந்த விஜய்… ஜனநாயகத்துக்கா? ஜனநாயகனுக்கா?

Home TamilNadu Silent Mode-ல் இருந்து வெளியே வந்த விஜய்… ஜனநாயகத்துக்கா? ஜனநாயகனுக்கா?
Silent Mode-ல் இருந்து வெளியே வந்த விஜய்… ஜனநாயகத்துக்கா? ஜனநாயகனுக்கா?
Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர் பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது. 

டெல்லியிலோ அல்லது இந்தியாவின் எந்த மூளையில் போராட்டங்கள் நடந்தாலும், முதல் ஆளாக குரல் கொடுப்பது தமிழ்நாடாக தான் இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததில் இருந்து எந்த மக்கள் போராட்ட்த்திற்கும் தவெக அரசு குரல் கொடுக்காமல் சைலண்ட் மோடிலேயே இருப்பதாக்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக போராட்டங்கள் அறிவித்து, “ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி”, “பாசிசம் பாயசம்” என்றெல்லாம் டயலாக் பேசி வந்த விஜய், இப்போது முதலமைச்சரான பிறகு மக்கள் பிர்சனையில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்றும், தவெக ஆட்சியில் தவெகவினரே தவறு செய்தாலும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தடியடி தாக்குதல் குறித்து பேசாத விஜய், நாளை ஜனநாயக பட ரிலீஸ் இருப்பதால், மாணவர்களுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் விஜய்யின் எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும்  வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.

நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 

விஜய்யின் இந்த பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, மத்திய அரசை நேரடியாக விமர்சிக்க முடியாமல், பூசி மொழுகுவதாகவும், அதென்ன நீட் தேர்வு வெகுவாகப் பாதிப்பது? ஒரு உறுதியான நிலைப்பாட்டை விஜய் எடுக்கவில்லை.. பாஜகவுடன் இணக்கமாக செல்வதை குறிக்கோளாக வைத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், இவ்வளவு தாமதாக பதிவிட வேண்டியது எதனால்? நாளை(ஜூலை 23) ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸாவதாலா? இல்லை உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பதற்காகவா? என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India