டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!

Home TamilNadu டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!
Spread the love

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கள்ளச்சந்தை மதுவிற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வின் மூலம் துணை விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்படும் என கூறினார். இதற்காக ஆண்டுதோறும் ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையான இஎஸ்ஐ வசதியும் வழங்கப்பட உள்ளதாகவும், ஊதிய உயர்வால் மதுபானங்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார்.

இந்த ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India