”உதறல்நிதி.. உளறல்நிதி… கிறுக்குநிதி..” – உதயநிதியை கடுமையாக சாடிய தவெக.!

Home TamilNadu ”உதறல்நிதி.. உளறல்நிதி… கிறுக்குநிதி..” – உதயநிதியை கடுமையாக சாடிய தவெக.!
”உதறல்நிதி.. உளறல்நிதி… கிறுக்குநிதி..” – உதயநிதியை கடுமையாக சாடிய தவெக.!
Spread the love

இதுதொடர்பாக தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது:

ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின்  அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.

நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?

பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.

அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.

அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும்.

ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக, அதிமுக என அனைவரையும் தவெக கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India