“தமிழ்நாடு தாங்காது CM Sir” – முதல்வரை சாடிய உதயநிதி..!

Home TamilNadu “தமிழ்நாடு தாங்காது CM Sir” – முதல்வரை சாடிய உதயநிதி..!
“தமிழ்நாடு தாங்காது CM Sir” – முதல்வரை சாடிய உதயநிதி..!
Spread the love

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, பெண்களின் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்ற கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டிருந்தார். இத்திட்டம் மே 29 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்பட இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இறுதி கட்டத்தில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டம் தான் தவெக அரசின் அதிகாரப்பூர்வ திட்டங்களின் முதல் படி. அப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியை எதற்காக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில், சிங்கப்பெண்ணே நிகழ்ச்சியை ரத்து செய்தது குறித்து முதலமைச்சர் விஜயை சாடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு  மக்களுக்கு சந்தேகம் வருது.

இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல. தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.

பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.

சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir” என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India