முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்:  உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 

Home TamilNadu முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்:  உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 
முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்:  உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 
Spread the love

தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது. அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார். உதயசந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

நிதித்துறை செயலராக சித்திக், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுவர்ணா சுற்றுலா கழக முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். விஷ்ணு முதல்வரின் கூடுதலாக செயலராக நியமிக்கப்பட்டார். அண்ணாதுரை முதல்வர் செயலாளர் 3 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India