1முதல் 9-ம் வகுப்பு : ஏப் 17 முதல் விடுமுறை, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள்  திறப்பு 

Home TamilNadu 1முதல் 9-ம் வகுப்பு : ஏப் 17 முதல் விடுமுறை, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள்  திறப்பு 
1முதல் 9-ம் வகுப்பு : ஏப் 17 முதல் விடுமுறை, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள்  திறப்பு 
Spread the love

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு, அரசு உதவி பெறும்,ம் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 25ம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.விடைத்தாள் மதிப்பீட்டு பணி, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

2026-27ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் 01.06.2026 திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு , அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

மேலும் வரும் கல்வியாண்டு முதல் 1-3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இவ்வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 01.06.2026 முதல் 03.06.2026 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 04.06.2026 (வியாழன் கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India