சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Home TamilNadu சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
Spread the love

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முன்பதிவுக்கு உயர்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும்.

இந்த நிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு உள்ளது..? தேவை எவ்வளவு..? என்பது குறித்து உடனடியாக இன்றுமதியத்திற்குள் விவரம் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் , தலைமை செயலாளர், உணவுத்துறை செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த அவசர ஆலாசனை கூட்டம் நடைபெற்றது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India