வசந்த காலத்தின் வருகையை உணர்த்தும் இப்பண்டிகை, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. சென்னை சவுகார்பேட்டை, பட்டாளம் மற்றும் பல மாவட்டங்களில் வடமாநிலத்தவர்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து, இசைக்கு ஏற்ப நடனமாடி ஹோலியை வரவேற்றனர்.
வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், ராமேஸ்வரம், மதுரை, சென்னை சவுகார்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் உற்சாகமாக வண்ணங்களைப் பூசி, நடனமாடி அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
ராமேஸ்வரம் ராமர் தீர்த்தத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், ராமேஸ்வரத்தில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகள் ஹோலி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணருக்கு வண்ணப் பொடிகள் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்த பிறகு, அனைவரும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி, நடனமாடி மகிழ்ந்தனர்.
அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை சீனியர் கமாண்டண்ட் மருத்துவர் சுனில் வண்ண பொடி பூசி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் அதிகாரிகள் சைலேந்திர சிங் மற்றும் சங்கேத் ஆகியோர் உடனிருந்தனர்.




Leave a Reply