உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள்  3 நாள் "லீவுங்க" 

Home TamilNadu உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள்  3 நாள் "லீவுங்க" 
உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள்  3 நாள் "லீவுங்க" 
Spread the love

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை). 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை (Dry Day) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் முடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள்/விற்பனையாளர்கள்/உதவி விற்பளையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பால், விடுமுறைக்கு முந்தைய தினங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகள் ஸ்டாக் வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று இந்த விடுமுறை தினங்களில் கள்ளசந்தைகளில் மதுபான விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India