திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

Home TamilNadu திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
Spread the love

சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு  பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில்  இருந்து  வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து  வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து  வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பு கூறுகையில், ”சென்னை விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் ஐந்து, மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால்,  விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India