பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 

Home TamilNadu பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 
Spread the love

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 7 சீசன்கள் வரையிலும் இதன் நெறியாளராக இருந்த கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகவே, அடுத்து விஜய் சேதுபதி நெறியாளராக கொண்டு வரப்பட்டுள்ளார். கமல்ஹாசன் அளவுக்கு இவரால் நெறியாள்கை செய்ய முடியுமா என்கிற கேள்விகளோடு முதல் எப்பிசோட் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி. இறங்கிய பால் எல்லாம் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார். 

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த சாச்சனாவும் ஒரு போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். “உங்களை அப்பான்னு கூப்பிறதா? சார்னு கூப்பிடுறதா?” என்று சாச்சனா கேட்க… “நீ எப்படி வேணாலும் கூப்பிடு… ஆனா மோசமா கேம் விளையாடிட்டு வீக் எண்ட்ல வந்து அப்பான்னு கூப்பிடாத” என்று கறாராகச் சொன்னார் விஜய் சேதுபதி. 

போட்டி தொடங்கிய 24 மணி நேரத்துக்குள்ளாகவே எவிக்சன் அறிவிக்கப்பட்டது. இந்த எவிக்சனில் அதிகம் பேர் சாச்சனாவை நாமினேட் செய்ததால் அவர் கண்ணீருடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளியேறுகையில், அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக கோப்பையையும் போட்டு உடைத்துவிட்டுச் செல்லுமாறு பிக் பாஸ் கூறியிருந்தார். 

கண்ணீர் ததும்ப அக்கோப்பையை உடைத்து விட்டு சாச்சனா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். சாச்சனா வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களை அதிருப்திக்கு ஆளாக்கியது. 24 மணி நேரத்துக்குள் எப்படி ஒருவர் இந்த வீட்டில் இருக்கத் தகுதி உடையவரா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும் என்பதே அனைவரது கேள்வியாகவும் இருந்தது. சாச்சனா வெளியேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் அவருக்கு இழைத்த அநீதி என்றே அனைவரும் பேசினர். இதனால் பிக்பாஸ் நிக்ழ்ச்சி பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது. 

சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் நிறைந்திருந்தது. அதை உறுதிப்படுத்துவதைப் போல சாச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதைப் போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சாச்சனா, வெளியே யாருடைய விளையாட்டு மிகவும் மோசமாக உள்ளது என்பது குறித்து போட்டியாளர்களிடையே பேசுவதைப் போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சாச்சனா மீண்டும் உள் வந்ததன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இனிதான் சாச்சனாவின் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும். 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.