மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!

Home TamilNadu மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!
மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!
Spread the love

டிடிஎஃப் மீண்டும் பைக் இயக்குவது போன்ற வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன். பைக் லைசன்ஸ் இல்லாத போது எப்படி பைக் இயக்குகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘வந்துட்டேன்னு சொல்லு..திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…’ என்ற மாஸ் வசனத்தை பேசாமல் செயலில் செய்து காட்டி வருகிறார் டிடிஎஃப் வாசன் என்ற தான் சொல்ல வேண்டும். 

தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக இருக்கும் டிடிஎஃப் வாசன் பல சர்ச்சைகளில் சிக்கியவர். பைக் ரேசிங் செய்து சர்ச்சையில் சிக்கிய இவர்,  கடந்தாண்டில் வேகமாக டூவீலரில் பயணிக்கும்போது ஒரு விபத்தில் சிக்கியதால் இவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு பிறகு பைக் தான ஓட்டக்கூடாது கார் ஓட்டுறேன் என்று சொல்லி கார் லைசன்சுக்கு விண்ணப்பித்து, தற்போது இந்தியா முழுவதும் காரில் டிராவல் செய்து வீடியோக்களை பதிவு செய்துக்கொண்டிருக்கிறார். ஆனால், என்னதான் இவ்வளவு சர்ச்சை, இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பினாலும், கொஞ்சம் கூட சோர்வடையாமல் ஏதோ ஒன்றை டிடிஎஃப் தொடர்ந்து செய்துக்கொண்டே இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 

அந்த வகையில், தான் மீண்டும் பைக் ஓட்டுவது போன்ற மாதிரியான வீடியோக்கள தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பேன்ஸ்க்கு ஷாக் கொடுத்திருக்கிறார். டிடிஎஃப் வாசன் ஒரு ரேஸ் அக்காடமியில் சேர்ந்திருப்பதாகவும், தகுதிச் சுற்றுகளில் கலந்துக்கொண்டு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு வருவதாகவும், தகுதிப்பெற்றால் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுது.

இவருடையே இந்த முயற்சியை பார்த்து ”அடக்குனா அடங்குற ஆளா நீ..” என்ற பாடல் வரிகளை எல்லாம் கமெண்ட்டில் பதிவிட்டு அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India