இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!

Home TamilNadu இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!
இதுக்கெல்லாம் NO ENTRY! தவெக மாநாட்டில் விதிக்கப்பட்ட ரூல்ஸ்!
Spread the love

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெறும் த.வெ.க மாநாட்டில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மாநாட்டுக்கு மதுபானங்களை கொண்டு செல்லவும், டம்ளர் போன்ற பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி ஸ்டிக் எடுத்து வரவும், வீடியோ பதிவு செய்யவும், பிளாஸ் போட்டோகிராபி மற்றும் ட்ரோன் போன்ற ரிமோட் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், மோட்டார் சைக்கிள், ஸ்கேட்டிங் போர்டு, பதாகைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பொருட்களை கொண்டு வரவும், ரேடியோ தொடர்பு கருவிகள் மற்றும் ஆபத்தான பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், லேசர் பாய்ண்டர்கள், ஆயுதங்கள், வெடி பொருட்கள், துப்பாக்கி மற்றும் தோட்டா ஆகியவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India