பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்

Home TamilNadu பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்
பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்
Spread the love

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. என தவெக தலைவர் விஜய்யை  நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடியுள்ளார்.

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலம் ஆனவர் போஸ் வெங்கட். இவர் சீரியல்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து  தலைநகரம், கோ, சிங்கம், சிவாஜி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னிமாடம், சார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் தவெகவின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஆளும் திமுக அரசை விஜய் சாடி பேசினார். இதற்கு திமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தவெக தலைவர் விஜய்யை மறைமுக சாடி உள்ளார். இது குறித்த பதிவு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.அதன்படி, போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், யப்பா..  உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்..  பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்..  முடிவு???  பாப்போம்.. என பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவாகவும், எதிராக கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India