போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி

Home TamilNadu போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி
போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி
Spread the love

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சந்திரமோகன் மற்றும் தனலட்சுமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் போலீசாரை மிரட்டிய சந்திரமோகனின் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியானது. போதையில் போலீசாரை தவறாக பேசி விட்டதாகவும், காவல்துறையிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார். 

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இருவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India