தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம்? – காட்டிக் கொடுத்த துணை நடிகை  

Home TamilNadu தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம்? – காட்டிக் கொடுத்த துணை நடிகை  
தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம்? – காட்டிக் கொடுத்த துணை நடிகை  
Spread the love

சினிமா நட்சத்திரங்கள் பங்குக்கொண்ட பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும் போது போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த துணை நடிகை மீனா போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகை மீனாவுக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.மருத்துவப்பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகை மீனா போலீஸ் விசாரணையில் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும்போது போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்கள் பயன்படுத்தும்போது, அதை பார்த்து அவரிடம் கேட்டு, போதைப் பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தான் போதைப்பொருள் வாங்கி 3000 ஆயிரம் அதிகமாக விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டியில் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில், தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கேரளாவில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நபரை கைது செய்த போது, அவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழில் பிசாசு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மற்றும் நடிகர் ஆகியோரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதேப்போல் தமிழிலும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் போதைப்பொருள் புழக்கம் உள்ளதாக என போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India