சென்னை பள்ளியில் வாயு கசிவு சம்பவம்- மாணவர்கள் செய்த செயலா? போலீசார் விசாரணை

Home TamilNadu சென்னை பள்ளியில் வாயு கசிவு சம்பவம்- மாணவர்கள் செய்த செயலா? போலீசார் விசாரணை
சென்னை பள்ளியில் வாயு கசிவு சம்பவம்- மாணவர்கள் செய்த செயலா? போலீசார் விசாரணை
Spread the love

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு சம்பத்தில் புதிய திரும்பமாக பள்ளியை சுற்றி வாயு கசிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருவெற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் செயல்படாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நிறைவடைந்தது. இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக மாணவிகள் 35-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதி சேர்ந்த நிலையில் கடந்த நான்காம் தேதி மீண்டும் அதேபோன்று 7 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பள்ளி மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டு தனியார் பள்ளி கல்வித்துறை இயக்குனர் முத்து பழனிசாமி நேரடியாக பள்ளியில் ஒருநாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மூன்று நாட்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் மூன்று நாட்களாக பள்ளியில் காற்று தர வாயு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.   

அந்த கடிதம் அனைத்தையும் பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு இடமும் பள்ளி அருகில் இருக்கக்கூடிய வீடு வசிக்கும் நபர்களிடமும், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் பள்ளி நிர்வாகத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் போல உத்தரவு பிறப்பித்து உடனடியாக அனைத்து தளங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் முழுமையாக விசாரித்த பின்னர் திங்கள், செவ்வாய் என 2 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டு புதன்கிழமை கட்டாயம் பள்ளி திறக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India