ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Home TamilNadu ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
Spread the love

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.துணை முதலமைச்சரின் துணை செயலாளராக காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டார். இவர் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக இருந்து வந்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India