நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

Home TamilNadu நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
Spread the love

நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார்.ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போன்று  காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் திருவுருவப்படத்திற்கு பாஜக மூத்த தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ வ.உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர். அவர் பெயரை கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு 170 கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்களை பாரத பிரதமர் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொள்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்  என்பதில் நம் மாநிலத்திற்கு நிதி அதிக அளவில் வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிவதற்கு தவறு என்ற ஒரு சட்டம் தெலுங்கானாவில் உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதியாக எதையெல்லாம் சொன்னார்களோ, அதை எல்லாம் மறுத்து வருகிறார்கள்.அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை சரியாக நிரப்பாததுதான். அரசு மருத்துவர்கள் சிறப்பு துறையில் சேர முடியாமல் செல்கிறது.திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அவர் கேட்டதை செய்வோம் என முதலமைச்சர் கூறுகிறாரே தவிர மக்கள் மனதில் என்ன இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர் செய்யவதில்லை என தெரிவித்தார்.மேலும், நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போன்று நடவடிக்கை எடுப்பது தவறு எனவும் நடிகை கஸ்தூரி விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக இருந்து வருகிறது எனவும் கூறினார்.

காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் கொலையுண்டு இத்தனை மாதங்கள் ஆகியும், கொலையாளிகளை கண்டறியவில்லை, வேங்கையியல் விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை, எவ்வளவோ பிரச்சனைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது, பாரபட்சமாக நடந்து கொள்வதாக உள்ளது. சில பேர் கருத்துக்களை தீவிரமாக கண்டிக்கிறார்கள், சில பேரை கண்டிப்பதில்லை. தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனாலதான் இன்று 16வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளது.

நிதிக்குழுவிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதல்வர் முன் வைத்துள்ளார். இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதே கோரிக்கையை கடந்த நாட்களுக்கு முன்பாக நிதிக்குழுவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கோரிக்கையை வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் நிராகரித்தார்.நிதி ஆயோக் போன்ற கூட்டங்களை புறக்கணிக்காமல் தமிழ்நாடு அரசு அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதாக கூறிய முதல்வர், திருமாவளவன் கூட்டத்தைக் கூட்டி அந்த கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏன் முதல்வர் இன்னும் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India