சென்னையை நெருங்கும் டிட்வா புயல் – 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் : 2 துறைமுகங்களில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Home TamilNadu சென்னையை நெருங்கும் டிட்வா புயல் – 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் : 2 துறைமுகங்களில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னையை நெருங்கும் டிட்வா புயல் – 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் : 2 துறைமுகங்களில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Spread the love

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நமாக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,  திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

நாளை (நவ.,30) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 1ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல்நீர் புகும் அபாயம்

தஞ்சாவூர் மாவட்டம், கீழதோட்டம், ஏரிப்புறக்கரை ஆகிய கடல் பகுதிகளில் கடல் நீர் பெருக்கெடுத்துள்ளதால் கடல் நீர் சாலை மட்டத்தை விட அரை அடி உயர்ந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடல் நீர் பெருக்கெடுத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது. கடந்த கஜா புயலின் போது கடல் நீர் பெருக்கெடுத்து ஏரிப்புறக்கரை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில் தற்போது கடல் நீர் பெருக்கெடுத்து இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India