
கச்சத்தீவை மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே கச்சத்தீவைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதியில்லை. கட்சத் தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி. அப்போதுதான் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலரவைப்பதற்கும் பயன்படுத்திய கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக. இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள். ஆனால் அம்மா அவர்கள் மீன்வர்களின் நலன் கருதி, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னோடியாக இருந்தது அதிமுக.

Leave a Reply