20 சதவீத போனஸ்.. அரசு அறிவித்த அடடே அறிவிப்பு..! யாருக்கு தெரியுமா?

Home TamilNadu 20 சதவீத போனஸ்.. அரசு அறிவித்த அடடே அறிவிப்பு..! யாருக்கு தெரியுமா?
20 சதவீத போனஸ்.. அரசு அறிவித்த அடடே அறிவிப்பு..! யாருக்கு தெரியுமா?
Spread the love

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு போனஸ் வழங்க அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10 சதவீத போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் 5.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றும், இதனால் 3 ஆயிரத்து 939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India