14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!

Home TamilNadu 14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!
14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!
Spread the love

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களும், பொறுப்பு அமைச்சர்களும்:

➤ திருநெல்வேலி மாவட்டத்திற்கு  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு 

➤ தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் .இ.பெரியசாமி 

➤ திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு 

➤ தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

➤ தென்காசி மாவட்டத்திற்கு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

➤ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு 

➤ நீலகிரி மாவட்டத்திற்கு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் 

➤ கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் . அர. சக்கரபாணி 

➤ கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி 

➤ காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி 

➤ பெரம்பலூர் மாவட்டத்திற்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் 

➤ நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

➤ மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன்


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India